ப்ளாஸ்டிக்
சமீபத்தில் வேலை நிமித்தமாக தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளை கடந்து செல்ல நேர்ந்தது. காணும் இடம் யாவும் ப்ளாஸ்டிக் குப்பைகள். கடவுள் எங்கும் இருக்கிறாரோ இல்லையோ, ப்ளாஸ்டிக் எல்லா இடங்களிலும் தென்படுகிறது எங்கெல்லாம் மனிதன் செல்கிறானோ அங்கெல்லாம் ப்ளாஸ்டிக். மதுரையில் குளங்கள் இருக்கவேண்டிய இடங்களில் வறண்ட மண்ணையே காண நேர்ந்தது. அப்படியே அதில் நீர் இருதுந்தாலும் அதிலும் ப்ளாஸ்டிக் குப்பைகள், மேலே மிதந்தவாறு. திருபரங்குன்றத்தில் உள்ள ஓர் நீர்நிலையே அதற்கு சான்று. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருநெல்வேலி போய்கொண்டிருந்தபோது என் நண்பன் விசேஷ் சொன்னான், "என்னடா இது highwayன்னு சொல்றாங்க ஆனா இவ்ளோ வெளிச்சமா street lights இருக்கு" அவன் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எப்படி வளர்ச்சி தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டினான். போகும் இடம் எல்லாம் 3G connectivityஆகவே இருந்தது. ராஜபாளையம் சென்றடைந்ததும் முதலில் தென்பட்டது, சாலையோடு ஓடிகொண்டிருந்த ஒரு கால்வாய். குளங்களில் தாமரை மலர்கள் மறைப்பது போல்...